22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
மலையாள திரையுலகில் பல வருடங்களாக துணை நடிகராக மற்றும் வில்லன்களில் ஒருவராக நடித்து வந்தவர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். கடந்த சில வருடங்களாக நல்ல கதாபாத்திரங்களையும் நல்ல படங்களையும் தேர்வு செய்து ரசிகர்களுக்கு பிடித்த ஒரு நடிகராக மாறிவிட்டார். குறிப்பாக அவர் நடித்த ஜோசப் திரைப்படம் அவரை ஒரு கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்த்தியது. தற்போது சில படங்களில் கதையின் நாயகனாகவும் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் முதன்முதலாக இயக்குனராகவும் மாறி ‛பனி' என்கிற படத்தை இயக்கியுள்ளார் ஜோஜு ஜார்ஜ். கதாநாயகியாக நாடோடிகள் அபிநயா நடித்துள்ளார். இந்த படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
ஆனால் யூடியூபர் ஆதர்ஷ் என்பவர் இந்த படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்களை கூறியுள்ளதுடன் படத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து வெளிப்படையாக கூறி தயவு செய்து இந்த படத்தை பார்க்க வேண்டாம் என பகிரங்கமாகவே விமர்சித்துள்ளார். யூடியூப்பில் மட்டுமல்லாது மற்ற அனைத்து சமூக வலைதளங்களிலும் இதே வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இவரது செயலால் கோபமான ஜோஜூ ஜார்ஜ் அவருடன் போனில் தொடர்பு கொண்டு காரசாரமாக பேசிய ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
அதே சமயம் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் இந்த விஷயத்தில் தான் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக கூறியுள்ளார். ‛‛கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் ஒரு படத்தை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. அதே சமயம் இந்த படம் மோசம்.. இதன் கதை இதுதான்.. இந்த படத்திற்கு போகாதீர்கள் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. என்னுடைய கடின உழைப்பும் பல கோடி ரூபாய் முதலீடும் இதற்குள் அடங்கி இருக்கிறது. அதை நான் எப்படியேனும் திரும்ப பெற்றாக வேண்டும். அதை தடுக்கும் விதமாக ஒருவர் செயல்படுகிறார் என்றால் என்னால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. விரைவில் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.