'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தசெ ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் அக்டோபர் 10ம் தேதி வெளியான படம் 'வேட்டையன்'. என்கவுண்டர் பற்றிய படமாக அமைந்த இந்தப் படத்திற்கான விமர்சனங்கள் நன்றாக வந்தாலும், ரஜினியின் முழுமையான படமாக இல்லாமல் இருந்தது என்ற கருத்துக்களும் பரவியது.
ரஜினியின் வழக்கமான கமர்ஷியல் படங்களைக் காட்டிலும் இந்தப் படத்திற்கான வசூல் குறைவாகவே இருந்தது. கடந்த வருடம் அவர் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' படம் 600 கோடியை வசூலித்தது. இந்தப் படத்தின் வசூலை நான்கு நாட்களுக்குப் பிறகு 240 கோடி வசூல் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அதன்பின் கடந்த இருபது நாட்களாக படத்தின் வசூல் என்னவென்பதை அறிவிக்கவில்லை.
இந்நிலையில் தற்போது படம் 25 நாட்களைக் கடந்துள்ளது. இந்த தீபாவளி விடுமுறையிலும் பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியுள்ளது. இன்றைய நாளில் கூட பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் தான் என்று தியேட்டர் வட்டாரங்களில் சொல்கிறார்கள்.
இப்படம் நவம்பர் 8ம் தேதி ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக உள்ளது. தியேட்டர்களை விடவும் ஓடிடி தளங்களில் அமோக வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.