அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

மலையாள திரையுலகில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த அறிக்கை வெளியானதை தொடர்ந்து பல நடிகைகள் சினிமா பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள். சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிலர் கைது செய்யப்பட்ட நிகழ்வுகளும் நடந்தன. அதே சமயம் இப்படி அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, அதிலும் மலையாள நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருப்பவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்ட போது சங்கத்தின் தலைமை பொறுப்பில் இருந்த மோகன்லால் உட்பட யாருமே இந்த ஹேமா கமிஷன் அறிக்கைக்கோ மற்றவர்களின் குற்றச்சாட்டுகளுக்கோ பெரிய அளவில் ரியாக்சன் காட்டவில்லை. அதற்கு பதிலாக இதற்கு தார்மீக பொறுப்பேற்று மோகன்லால் உள்ளிட்ட அனைவருமே மொத்தமாக நடிகர் சங்கத்திலிருந்து ராஜினாமா செய்தனர்.
அடுத்ததாக நடிகர் சங்கத்துக்கு புதிய தேர்தல் எப்போது நடைபெறும் என தெரியாத நிலையில் பிரபல மலையாள நடிகரும் பா.ஜ., எம்பி.,யும் தற்போதைய மத்திய அமைச்சருமான சுரேஷ்கோபி நடிகர் சங்க விவகாரம் குறித்து பதில் அளித்துள்ளார். இது குறித்து சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் அவரிடம் கேட்டபோது, மலையாள நடிகர் சங்கம் (அம்மா) விரைவில் புதிய உறுப்பினர்களை பதவிக்கு கொண்டு வந்து வழக்கம் போல தங்களது பொறுப்புகளை கவனிக்க துவங்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதேசமயம் சங்கத் தலைவர் மோகன்லால் மற்றும் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் இப்படி கூண்டோடு ராஜினாமா செய்தது குறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்க மறுத்து விட்டார் சுரேஷ்கோபி.