'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மலையாள திரையுலகில் துணை நடிகராக நுழைந்து, குணச்சித்திர நடிகராக மாறி பின்னர் வில்லன், கதையின் நாயகன் என அடுத்தடுத்த உயரங்களுக்குச் சென்றவர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். கடந்த வருடம் 'பணி' என்கிற ஒரு படத்தையும் வெற்றிகரமாக இயக்கி இயக்குனராகவும் மாறினார். மலையாளத்தையும் தாண்டி தமிழில் 'ஜகமே தந்திரம், ரெட்ரோ' சமீபத்தில் வெளியான 'தக் லைப்' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2021ல் மலையாளத்தில் வெளியான 'சுருளி' என்கிற படத்தில் ஜோஜு ஜார்ஜ் நடித்திருந்தார். வித்தியாசமான கதைக்கும் கதைக்களத்திற்கும் பெயர் பெற்ற இயக்குனர் லிஜோஸ் பெல்லிசேரி இந்த படத்தை இயக்கியிருந்தார்.
இந்த படம் வெளியான சமயத்தில் இதில் பேசப்பட்ட கொச்சையான வசனங்களுக்காக மிகப்பெரிய கண்டனங்களை எதிர்கொண்டது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சுருளி படத்தில் நடித்ததற்கான தனது சம்பளத் தொகை பாக்கி இன்னும் தரப்படவில்லை என்றும் இந்த படத்தில் தான் பேசிய வசனங்களால் தனது பெயர் தனது சொந்த கிராமத்திலேயே கெட்டுப் போனதுதான் மிச்சம் என்றும் தனது குமுறலை ஜோஜு ஜார்ஜ் வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தில் வசனங்கள் ராவாக இருக்க வேண்டும் என கொச்சையாக எழுதப்பட்டிருந்தன. அதே சமயம் இவை விருது விழாக்களுக்கு அனுப்பப்பட வேண்டும் என்பதற்காக இயல்பாக இருக்க வேண்டும் என எழுதப்பட்டுள்ளதாகவும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் போது அவை நீக்கப்பட்டு விடும் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் உறுதி அளித்திருந்தார்கள். அந்த நம்பிக்கையில் இருந்தபோது தான் படம் திடீரென தியேட்டர்களில் வெளியானது. எந்த ஒரு கொச்சையான வார்த்தையும் படத்திலிருந்து நீக்கப்படவில்லை. என்னுடைய சொந்த ஊரிலேயே என்னை பலரும் இப்படி வசனங்களை பேசி இருக்கிறாயே என்று விமர்சித்தார்கள். அது மட்டுமல்ல இந்த படத்திற்காக பேசப்பட்ட என்னுடைய சம்பளத் தொகை கூட இன்னும் முழுமையாக வழங்கப்படாமல் பாக்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.