பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

கடந்த வருடம் மலையாளத்தில் பணி என்ற படம் வெளியானது. மலையாள திரையுலகில் பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்து வரும் ஜோஜூ ஜார்ஜ் இந்த படத்தில் கதையின் நாயகனாக நடித்ததுடன் முதன்முறையாக இந்த படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். நாடோடிகள் அபிநயா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். பழிவாங்கும் கதையம்சத்துடன் வெளியான இந்த படத்தின் கதை விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியது. தமிழிலும் கூட இந்த படத்துக்கு வரவேற்பு கிடைத்தது.
நடிகர் ஜோஜூ ஜார்ஜ் தற்போது சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ, அடுத்தபடியாக வெளியாக இருக்கும் கமலின் தக் லைப் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது பணி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக தனது சோசியல் மீடியா பக்கத்தின் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “என்னுடைய அடுத்த படம், புதிய கதை... புதிய இடங்கள்.. புதிய கதாபாத்திரங்கள்.. பணி-2 விரைவில்” என்று கூறியுள்ளார். வரும் டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.