லாரன்ஸ் உடன் இணையும் மாதவன், நிவின் பாலி | பிறந்தநாளில் சூர்யா 45 பட அப்டேட் | மோகன்லாலின் மலையாள படப்பிடிப்புக்கு விசிட் அடித்த நெல்சன் : ஜெயிலர் 2விலும் நடிப்பது உறுதி | காந்தாரா படப்பிடிப்பில் ஆற்றில் மூழ்கி துணை நடிகர் உயிரிழப்பு | எளிமையாக நடைபெற்ற ரெமோ வில்லனின் திருமணம் | ரெட்ரோ படப்பிடிப்பில் காயம் அடைந்த சிறுமிக்கு உதவிக்கரம் நீட்டிய மம்முட்டி | கலைஞர்களுக்காகவே உருவாக்கப்பட்ட 'குங்குனாலோ' செயலி | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நடிக்கிறாரா சமந்தா? அவரே வெளியிட்ட தகவல் | பெயரை மாற்ற போகிறாரா தெலுங்கு நடிகர் நானி? | விஜய் பிறந்தநாளில் 'ஜனநாயகன்' அறிமுக டீசர் வெளியாகிறது? |
ரீ-ரிலீஸ் என்பது இப்போதைய டிரென்டிங்கில் உள்ளது. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் ரீ-ரிலீஸ் டிரென்ட் வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது. 4 கே டிஜிட்டல் தரத்தில் ஒரு படத்தை வெளியிடுவது என்பது சாதாரண விஷயமல்ல. அதற்காக நிறையவே சிரமப்பட வேண்டி இருக்கும்.
முன்பெல்லாம் பிலிம் வடிவில்தான் திரைப்படங்களின் பதிவும், திரையிடலும் இருந்தது. இப்போது அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. பிலிம் வடிவத் திரைப்படங்கள் நெகட்டிவ்வாகத்தான் பாதுகாத்து வைக்கப்படும். பிலிம் நெகட்டிவ், சவுண்ட் நெகட்டிவ் என இரண்டு இருக்கும். அவற்றை ஏதாவது பிலிம் லேபரேட்டரியில் பாதுகாத்து வைப்பார்கள். அதிகபட்ச ஏசி-யில் அவை பல வருடங்களாக பாதுகாத்து வைக்கப்படும். அவற்றை வருடத்திற்கு ஒரு முறையாவது எடுத்து சுத்தப்படுத்தி வைக்க வேண்டும். அந்த நெகட்டிவ் யாருடைய உரிமையில் இருக்கிறதோ அல்லது அந்தப் படத்தின் தயாரிப்பாளரோ அதற்கான செலவை ஏற்றுக் கொள்வார்கள்.
முறையாக பாதுகாத்து வைக்கப்படாத, சரியாக பராமரிக்கப்படாத நெகட்டிவ்கள் காலப் போக்கில் அழிந்துவிடும். அவற்றை அந்த கேன்களில் இருந்து வெளியில் எடுத்துப் பார்த்தால் மொத்தமாக ஒட்டிக் கொண்டிருக்கும், அல்லது அதில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் அழிந்து போயிருக்கும். ஒரு சிலர் மட்டுமே அவற்றைப் பொக்கிஷமாக பாதுகாத்து வைப்பார்கள். அதனால்தான் பல பழைய படங்களை நம்மால் புதிய வடிவில் பார்க்க முடியாமல் போகிறது.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அப்படியான நெகட்டிவ்கள் கிடைக்காமல், அவற்றை பாசிட்டிவ்வாக மாற்றி தியேட்டரில் ஓட்டிய பிரிண்ட்களை வைத்து கூட டிஜிட்டல் தரத்தில் மாற்றிக் கொள்ள முடியும். ஆனால், அதற்காக நிறைய வேலை செய்ய வேண்டி இருக்கும்.
இது பற்றி புரிய வைப்பதற்காக நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆக உள்ள தெலுங்குப் படமான 'ஜகதக வீருடு அதிகலோக சுந்தரி' படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஒரு வீடியோவை நேற்று வெளியிட்டுள்ளார்கள். 35 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படத்தின் நெகட்டிவ் மொத்தமாக அழிந்து போய் உள்ளது. 2018 முதல் அதன் பிரிண்ட்கள் எங்காவது கிடைக்கிறதா என ஆந்திரா, தெலங்கானாவில் உள்ள பழைய தியேட்டர்களைத் தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார்கள். கடைசியாக பல இடங்களிலிருந்து பத்து பிரிண்ட்களைத் தேடிப் பிடித்திருக்கிறார்கள்.
அந்த பிரிண்ட்களில் பல இடங்களில் காட்சிகள், ஒலிகள் மோசமாக இருந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் சரி செய்து, வெட்டி, ஒட்டி, பின்னர் 'ஸ்கேனிங்' செய்து அவற்றில் உள்ள கலர் குறைபாடுகள், கீறல்கள், ஒலி சிக்கல்கள் ஆகியவற்றைச் சரி செய்து புதிதாக 4 கே தரத்தில் முழுமையாக மாற்றி இருக்கிறார்கள். அதற்காக கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக உழைத்திருக்கிறார்கள்.
தெலுங்குத் திரையுலகத்தில் ஒரு அற்புதமான என்டர்டெயின்மென்ட் படமாக அமைந்த ஒரு படம் அது. இந்தக் காலத்தில் எதையுமே சிறந்த தரத்தில் பார்க்க வேண்டும் என்றுதான் இன்றைய சினிமா ரசிகர்கள் விரும்புகிறார்கள். அவர்களது சிறு வயதில் வந்த படங்களையோ, அதற்கு முன்னதாக வந்த படங்களையோ புதிய தொழில்நுட்பத்தில் பார்க்கும் ஆர்வம் தமிழ், தெலுங்கு ரசிகர்களுக்கு உள்ளது. அதனால்தான் சில ரீ-ரிலீஸ் படங்களுக்கான வசூல் இப்போது வெளியாகும் புதிய படங்களின் வசூலை விடவும் சிறப்பாக இருக்கிறது.