எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் | பிளாஷ்பேக்: கல்கியின் நிறைவேறாத கனவு | தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் |

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 'நாயகன்' படத்தை அடுத்து 38 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி 'தக்லைப்' படத்தில் இணைந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி படுதோல்வி அடைந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் தோல்வி குறித்து ஒரு பேட்டியில் இயக்குனர் மணிரத்னம் கூறுகையில், ''எங்களது கூட்டணியில் நாயகன் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட ஒரு படமாக இருந்தது. அதனால் அவர்கள் இந்த தக்லைப் படத்தை இன்னொரு நாயகனாகவே எதிர்பார்த்துள்ளார்கள். ஆனால் நாங்கள் மீண்டும் நாயகன் பாணியில் ஒரு படம் எடுக்க விரும்பவில்லை. அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படத்தை கொடுப்பதற்கே திட்டமிட்டோம். அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒரு மாதிரியாக இருக்க, நாங்கள் இன்னொரு மாதிரியாக இந்த தக்லைப் படத்தை கொடுத்திருந்தோம். அது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து விட்டது. படத்தின் தோல்விக்கு அதுதான் காரணம்.
அவர்கள் நாயகனை கருத்தில் கொள்ளாமல் இந்த தக்லைப் படத்தை பார்த்திருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு பிடித்திருக்கும். என்றாலும் ரசிகர்கள் விரும்பும் வகையில் இந்த படத்தை கொடுக்க முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறி உள்ளார் மணிரத்னம்.