சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த 'கேம் சேஞ்ஜர்' படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு படுதோல்வியை சந்தித்தது. இது தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கும், 'இந்தியன் 2' தோல்விக்கு பின் வெற்றியை எதிர்நோக்கிய இயக்குனர் ஷங்கருக்கும் பேரடியாக விழுந்தது. படத்தின் எடிட்டராக இருந்த ஷமீர் முகம்மது, ''அது ஒரு பயங்கரமான அனுபவம். நான் எதிர்பார்த்ததை விட படம் நீண்ட காலம் எடுத்துக் கொண்டது. அதனால், அந்தப் படத்திலிருந்து பாதியில் வெளியேறினேன். படத்தின் முதற்கட்ட நீளம் ஏழரை மணி நேரம் இருந்தது. அதை மூன்று மணி நேரமாகக் குறைத்தேன். பின்னர் வேறொரு எடிட்டர் அதை இன்னும் குறைத்தார்'' என குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், தயாரிப்பாளர் தில் ராஜூ தற்போது நிதின் நடிப்பில் 'தம்முடி' படத்தை தயாரித்துள்ளார். இப்படம் ஜூலை 4ல் ரிலீசாகிறது. படத்திற்கான புரமோஷன் பணிகளில் மும்முரமாக இருக்கும் தில் ராஜூ, 'கேம் சேஞ்ஜர்' படத்தில் செய்த தவறு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது:
எனது திரையுலக வாழ்வில், ஷங்கர் போன்ற பெரிய இயக்குநர்களுடன் ஒருபோதும் பணியாற்றியதில்லை. 'கேம் சேஞ்ஜர்' படம் தான் எனது முதல் தவறான முடிவு. அப்படத்தின் ஒப்பந்தத்தில் எனது கருத்துகளை தெளிவாக குறிப்பிட்டு தயாரிப்பில் இறங்கியிருக்க வேண்டும். ஆனால், நான் அப்படிச் செய்யவில்லை. அது எனது தவறு. அப்படத்தின் எடிட்டர் கூறியிருப்பது போன்று, படத்தின் காட்சிகள் ஏழரை மணி நேரம் இருந்தது உண்மை தான். ஒரு படத்தின் விஷயங்கள் சரியாக நடக்காதபோது, அவற்றை சரி செய்வது தயாரிப்பாளரின் பொறுப்பு. அந்த பழியை ஏற்றுக் கொள்கிறேன். 'கேம் சேஞ்ஜர்' மாதிரியான ஒரு படத்தின் திட்டத்துக்கு முதலில் பச்சைக் கொடி காட்டியிருக்கக் கூடாது. இவ்வாறு தில் ராஜூ கூறியுள்ளார்.