தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தான் நடித்து திரைக்கு வந்த 'குட் பேட் அக்லி' படம் 300 கோடி வரை வசூல் செய்த நிலையில், மீண்டும் தனது 64வது படத்திலும் அவரது இயக்கத்திலேயே நடிக்கப் போகிறார் அஜித்குமார். கடந்த சில மாதங்களாகவே கார் பந்தயங்களில் அஜித்குமார் ஈடுபட்டு வருவதால், தற்போது அப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கி இருக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் இல்லாமல் மற்ற நடிகர் நடிகைகளை வைத்து முதல் கட்டமாக படப்பிடிப்பு நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது ஐரோப்பியன் சீரியஸ் ரேஸில் மூன்றாவது ரவுண்டில் பங்கேற்பதற்கு தயாராகி வருகிறார் அஜித்குமார். அதோடு, அவர் தனது தலையில் மொட்டை அடித்துள்ளார். இது குறித்த வீடியோ வெளியானதை அடுத்து, ஏற்கனவே தான் நடித்த 'ரெட், வேதாளம்' படங்களின் லுக்கில் அஜித்குமார் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.