தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
மலையாளத்தில் பிரபல நடிகரும் தற்போதைய மத்திய இணை அமைச்சருமான சுரேஷ்கோபி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜேஎஸ்கே (ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா)'. முழுக்க முழுக்க நீதிமன்ற பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் பிரவீன் நாராயணன் இயக்கியுள்ளார். ஜூன் 27ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் சமீபத்தில் இந்த படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டு எந்தவித 'கட்'களும் இன்றி யு/ஏ 13+ சான்றிதழையும் பெற்றது. ஆனால் எதிர்பாராத விதமாக திடீரென சென்சார் குழுவினர் இந்த படத்தின் டைட்டிலில் சிறிய மாற்றம் செய்யும்படி படக்குழுவினருக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
குறிப்பாக டைட்டிலில் இடம் பெறும் ஜானகி என்கிற பெயரை மாற்றும்படி அவர்கள் நிர்பந்தித்து உள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள படத்தின் இயக்குனர் பிரவீன் நாராயணன், அதனால் வரும் ஜூன் 27ம் தேதி திட்டமிட்டபடி இந்த படம் ரிலீஸ் ஆகாது என்றும் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார். மீண்டும் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டு இதே டைட்டிலை தக்க வைப்பார்களா அல்லது டைட்டிலை மாற்றுவார்களா என்பது இனிமேல் தான் தெரிய வரும். ஒரு மத்திய இணை அமைச்சராக இருக்கக்கூடிய சுரேஷ்கோபி நடித்த படம் கூட சென்சாரில் சிக்கலை எதிர்கொள்கிறது என்பது ஆச்சரியமான ஒன்றுதான்.