'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு | மோகன்லாலுக்கு விருது கிடைத்ததை கொண்டாடிய திரிஷ்யம் படக்குழு | 8 மாதங்களுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பும் மம்முட்டி | 'ஜெய் ஹனுமான்' படம் : ரிஷப் ஷெட்டி தந்த அப்டேட் | 'குட் பேட் அக்லி' மற்றும் 'ஓஜி' ஒரே கதையா : இயக்குனர் பதில் | அடுத்து ஒரே ஒரு பெரிய ரிலீஸ் மட்டுமே… | பிளாஷ்பேக் : ரஜினிகாந்துக்கு எழுதிய கதையில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக்: ஹீரோவாக நடித்த ஏ.பி.நாகராஜன் | ஏஐ வீடியோக்கள், ஆபாச தளம் : டில்லி உயர்நீதி மன்றத்தில் நாகார்ஜுனா வழக்கு |
மலையாள திரையுலகில் பிரபல எழுத்தாளர், கதாசிரியர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் மூத்த கலைஞரான இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன். சமீபத்தில் நடைபெற்ற ஒரு திரைப்பட மாநாட்டில் கலந்து கொண்ட இவர், அந்த மாநாட்டில் பாடகர்கள் சங்கம் சார்பாக கலந்து கொண்ட பின்னணி பாடகி புஷ்பாவதி என்பவர் குறித்து சர்ச்சை அளிக்கும் விதமாக கருத்தை கூறினார். அதாவது, 'இதுபோன்ற திரைப்பட மாநாடுகளில் பின்னணி பாடகர்களுக்கு என்ன வேலை, அழைப்பிதழ் கூட இல்லாமல் வந்து விடுகிறார்கள்' என்பது போன்று அவர் கூறியிருந்தார். இது மலையாள பின்னணி பாடகர்கள் சங்கத்தினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பின்னணி பாடகர்கள் சங்கத்திலிருந்து அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் அவர் பாடகி குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் அவர்கள் கூறும்போது, “திரைப்பட மாநாடு குறிப்பிட்ட எல்லை அளவிலேயே நடைபெற்று வந்த நிலையில் தற்போது அது இன்னும் பல அமைப்புகளை உடன் சேர்த்துக்கொண்டு விரிவு செய்யப்பட்டு வருகிறது. அதில் ஒரு அங்கமாகத்தான் பாடகர் சங்கமும் நிறைந்துள்ளது. அதன் சார்பாக தான் முறையான அழைப்புகளின் பெயரில் தான் பாடகி புஷ்பாவதி உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர். இப்படிப்பட்ட நடைமுறைகளை கூட சரியாக தெரிந்து கொள்ளாத மூத்த கலைஞர் அடூர் கோபாலகிருஷ்ணன் இப்படி கருத்து கூறியுள்ளது கண்டிக்கத்தக்கது. அவர் இது குறித்து தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.