ஏஐ தொழில்நுட்பத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சன்னி லியோன் | எனது அந்த இரண்டு படங்களை ஜனாதிபதி குறிப்பிட்டது ஏன் : மோகன்லால் விளக்கம் | 60 புதுமுக நடிகர்களுடன் பிரித்விராஜ் நடிக்கும் சந்தோஷ் டிராபி | கூலியில் ஏற்பட்ட மனக்குறை : ரெபோ மோனிகா ஜான் ஆதங்கம் | 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரிஜினல் கிளைமாக்ஸ் உடன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ஷோலே | 'இட்லி கடை' படத்தின் நீளம் குறித்து தகவல் இதோ! | என் அம்மா அளவுக்கு என்னால் சினிமாவில் சாதிக்க முடியாது : ஜான்வி கபூர் | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு தொடங்கியது! | தேசிய விருது : தன் சாதனையை முறியடித்த குட்டி தேவதைக்கு கமல் வாழ்த்து | பிளாஷ்பேக்: சாதனைத் திரைத் தாரகைகள் சரிதா, ஷோபாவை தமிழுக்கு அறிமுகப்படுத்திய கே பாலசந்தர் |
மலையாள திரையுலகில் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் இரண்டுக்கும் அடுத்தடுத்த நாட்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆச்சரியமாக இந்த இரண்டு சங்கத்திற்கும் தலைமை பொறுப்புக்கு முதன்முறையாக ஒவ்வொன்றுக்குமே ஒரு பெண் வேட்பாளர் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்கள். அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களாகவே தயாரிப்பாளர் சங்கத்துடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த பெண் தயாரிப்பாளர் சான்ட்ரா தாமஸ் இந்த முறை தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஆனால் அவர் இரண்டு படங்கள்தான் தயாரித்திருக்கிறார் என்றும் மொத்தம் மூன்று படங்கள் தயாரித்திருக்க வேண்டும் என்றும் காரணம் காட்டி அவரது வேட்பு மனுவை தயாரிப்பாளர் சங்க தேர்தல் குழு நிர்வாகிகள் நிராகரித்தனர். அதே சமயம் சான்ட்ரா தாமஸ், விஜய் பாபு என்கிற நடிகருடன் இணைந்து ப்ரைடே பிலிம் ஹவுஸ் என்கிற நிறுவனம் மூலமாக ஏழு படங்களை தயாரித்திருக்கிறார். அதை அவர்கள் வேண்டுமென்றே கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தன்னை நிராகரிக்க வேண்டும் என்கிற நோக்கில் இதை செய்துள்ளதாக குற்றம் சாட்டிய சான்ட்ரா தாமஸ் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் தான் நடிகர் மம்மூட்டி தன்னை தொலைபேசியில் அழைத்து, தற்போது தயாரிப்பாளர் சங்கம் குறித்து தான் நீதிமன்றத்தில் தொடர்ந்து உள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார் என ஒரு அதிரடி தகவலை வெளியிட்டுள்ளார் சான்ட்ரா தாமஸ்.
மேலும் இது குறித்து அவர் பேசும்போது, “மம்முட்டி என்னிடம் போனில் தொடர்புகொண்டு கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் பேசினார். நான் தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிராக தொடுத்த வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்பதாகத்தான் அவரது பேச்சு இருந்தது. நான் அவரிடம் இதே இடத்தில் உங்கள் மகள் இருந்திருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவரிடம் இருந்து பதில் இல்லை. ஓகே உன் விருப்பம். இனி நான் எதுவும் சொல்வதற்கு இல்லை என்று சொல்லிவிட்டார். ஒவ்வொருவரும் என்னை இங்கிருந்து வெளியேற்ற நினைத்தால் நான் நிச்சயமாக இங்கே இருப்பதற்கு இன்னும் அதிகமாக போராடுவேன்” என்று அழுத்தமாக கூறியுள்ளார் சான்ட்ரா தாமஸ்.