சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

மலையாள திரையுலகில் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி தயாரிப்பாளர் சங்கத்திற்கும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடிகர் சங்கத்திற்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த வருடம் ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, நடிகர் சங்க தலைவராக இருந்த மோகன்லால் ராஜினாமா செய்தார். தற்போது மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்து விட்டார். இதனை தொடர்ந்து தலைவர் பதவிக்கு கிட்டத்தட்ட ஆறு பேர் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் ஆச்சரியமாக இந்த 30 வருடத்தில் முதல் முறையாக நடிகை ஒருவர் தலைவர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். அவர் கவர்ச்சி நடிகை ஸ்வேதா மேனன் தான்.
இவருக்கு எதிராக வலுவாக நிற்கும் இன்னொரு போட்டியாளர் என்றால் அது பாட்ஷா படத்தில் வில்லனாக நடித்த நடிகர் தேவன் தான். இந்த நிலையில் திடீரென எதிர்பாராத விதமாக ஸ்வேதா மேனன் மீது எர்ணாகுளம் சென்ட்ரல் போலீசார் எப்ஐஆர் பதிந்து வழக்கு பதிவு செய்துள்ளனர். மேனாச்சேரியைச் சேர்ந்த மார்ட்டின் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் எப்ஐஆர் பதிந்துள்ளனர்.
அதாவது கடந்த மார்ச் மாதத்திற்கு முன்பாக நடிகை ஸ்வேதா மேனன் ஒரு பேட்டியின்போது,“பணம் கிடைத்தால் மீண்டும் ஆபாசமான வீடியோக்களில் நடிக்க தயார் என்பது போல கூறி இருந்தாராம். இதனை மேற்கோள் காட்டி இப்படி பணத்திற்காக ஆபாச வீடியோக்களில் நடிப்பது சட்டப்படி தவறு என்கிற குற்றச்சாட்டை முன்வைத்து மார்ட்டின் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் தான் தற்போது ஆகஸ்ட்டில் ஸ்வேதா மேனன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
ஆனால் இது நடிகை ஸ்வேதா மேனனை தேர்தலில் தோற்கடிப்பதற்கான ஒரு புதிய முயற்சி என்று திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதே சமயம் அந்த மார்ட்டின் என்பவரோ, “கடந்த மார்ச் மூன்றாம் தேதியே இது குறித்து நான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து உள்ளேன். ஆனால் அதன் மீது பல நாட்களாக நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது நீதிமன்றம் போலீசாருக்கு இந்த வழக்கில் ஸ்வேதா மேனன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர் மீது எப்ஐஆர் பதியப்பட்டுள்ளதே தவிர அவர் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் நோக்கத்தில் எலாம் இந்த வழக்கு தொடரப்படவில்லை” என்று கூறியுள்ளார்.