தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! | 'ஹாப்பி ராஜ்' படத்தை தெலுங்கில் வெளியிடும் மைத்ரி நிறுவனம்! | ரிலீஸூக்கு தயாராகும் 'மிஸ்டர். எக்ஸ்' படம் | பரதம் ஆடி அசத்தும் நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன் | பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம் | 'ப்ரோ கோட்' தலைப்பு மாறுகிறது |

மலையாள திரையுலகில் ஒரு பக்கம் கதையம்சம் கொண்ட படங்கள் வெளியான போதும் 'லோகா சாப்டர் 1 சந்திரா, தொடரும்' போன்ற படங்கள் 250 கோடி தாண்டி வசூலித்த போதும் கடந்த 2025ம் வருடத்தில் மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட 185 படங்கள் வெளியான நிலையில் அதில் 150 படங்கள் மிகப்பெரிய தோல்வி படங்கள் என்றும் ஒன்பது படங்கள்தான் ஹிட் படங்கள் என்றும் கிட்டத்தட்ட கடந்த வருடம் மலையாள திரையுலகிற்கு 530 கோடி ரூபாய் நஷ்டம் என்றும் பாக்ஸ் ஆபீஸ் தரப்பிலிருந்து வருடாந்திர கணக்கு வெளியாகி உள்ளது.
அதேசமயம் 2025ம் வருடத்தின் இறுதியில் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை ரிலீஸ் ஆக வெளியான நிவின்பாலியின் 'சர்வம் மாயா' திரைப்படம் 10 நாட்களுக்குள் 75 கோடியை தாண்டி வசூலித்து தற்போதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே ஒரு வசூல் ரீதியான வெற்றி படத்திற்காக காத்திருந்த நிவின்பாலிக்கு இந்த படம் ஒரு ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது. அது மட்டுமல்ல கடந்த வருட மலையாளத் திரையுலக பயணத்தின் இறுதியை மகிழ்ச்சியுடன் முடித்து வைத்துள்ளது.
இதே போல தான் கடந்த 2024லும் கிறிஸ்துமஸ் ரிலீசாக வெளியான உன்னி முகுந்தனின் 'மார்கோ' திரைப்படம் கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் வசூலித்து மலையாள திரையுலகிற்கு உற்சாகமூட்டி 2025ம் வருடத்தை மகிழ்ச்சியுடன் ஆரம்பித்து வைத்தது இங்கே குறிப்பிடத்தக்கது.