படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் |
மலையாள திரையுலகில் கடந்த வருடம் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதை தொடர்ந்து பல நடிகைகள் தாங்கள் பாலியல் ரீதியாக பிரச்னைகளை சந்தித்ததாக நடிகர்கள், இயக்குனர்கள் மீது புகார்களையும் குற்றச்சாட்டுகளையும் வைத்தனர். ஆனால் பின்னர் இது குறித்த விசாரணையில் இவை அனைத்தும் கிட்டத்தட்ட போலியான குற்றச்சாட்டுகள் என்றும் ஆதாரமற்றவை என்றும் பல வழக்குகளில் நிரூபணம் ஆகின. அப்படித்தான் நடிகை மினு முனீர் என்பவர் பிரபல மலையாள இயக்குனரும் நடிகருமான பாலச்சந்திரன் மேனன் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். காவல்துறையில் இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் பாலச்சந்திர மேனன் மீது வழக்கு பதியப்பட்டது.
அதேசமயம் நடிகை மினு முனீரும் அவரது வக்கீலும் சேர்ந்து தன்னை மிரட்டி பணம் பறிக்க முயற்சிப்பதாக கூறி பாலச்சந்திரன் மேனனும் போலீசில் புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து நடிகை மினு முனீர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவரது வக்கீலான சங்கீத் லூயிஸ் என்பவரும் திருச்சூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவர் இரண்டாவது குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.