மேலிடத்து உத்தரவு... கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் | 'பேடி' படத்தின் புதிய அப்டேட் | தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் |
பிருவித்ராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள 'எல் 2 எம்புரான்' மலையாளப் படம் இந்த வாரம் மார்ச் 27ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகிறது. இந்தப் படத்திற்கு தமிழகத்தில் தியேட்டர்களை ஒப்பந்தம் செய்து தரும் பணிகளை ரெட் ஜெயண்ட் நிறுவனம் செய்து வருகிறதாம்.
அதன் காரணமாக அதேநாளில் விக்ரம் நடித்துள்ள தமிழ்ப் படமான 'வீர தீர சூரன் 2' படத்திற்குக் கிடைக்கும் தியேட்டர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாம். இத்தனைக்கும் தமிழகத்தில் 'எல் 2 எம்புரான்' படத்திற்கு எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லை.
கேரளாவில் 'எல் 2 எம்புரான்' படத்திற்குத்தான் முன்னுரிமை, அது எங்கள் மலையாளப் படம் என அங்குள்ள தியேட்டர்காரர்கள் சொல்கிறார்களாம். அதனால், அங்கு 'வீர தீர சூரன் 2' குறைவான தியேட்டர்களிலேயே வெளியாகிறது. ஆனால், அது போல ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழ்ப் படத்திற்குத்தான் முன்னுரிமை என சொல்லவில்லை.
மும்மொழிக் கொள்கையை எதிர்த்து, தமிழ், தமிழ், என பேசிக் கொண்டிருக்கும் ஆளும் கட்சியின் நிறுவனமான ரெட் ஜெயண்ட் நிறுவனம் மலையாளப் படத்திற்கு இப்படி முன்னுரிமை தருவது சரியா என தமிழ்த் திரையுலகத்தில் உள்ள பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். இத்தனைக்கும் முதல்வர் குடும்பத்திற்கு விக்ரமும் ஒரு விதத்தில் உறவினர் தான்.
இதனால், 'வீர தீர சூரன்' குழுவினர் அமைச்சர் உதயநிதியிடம் இது குறித்த முறையிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.