தமிழில் ரீமேக் ஆகும் ஸ்ரீ லீலாவின் 'கிஸ்' | ராஜமவுலி இயக்கத்தில் மூன்று பாகங்களாக 'மகாபாரதம்' | படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைக்க மறுப்பு : பெப்சி மீது தயாரிப்பாளர் சங்கம் வழக்கு | பிளாஷ்பேக்: இரண்டு ஆக்சன் ஹீரோக்கள் மோதிய 'நல்ல நாள்' | பிளாஷ்பேக் : ஆண்டாள் பெருமையை உலகிற்கு சொன்ன படம் | புஷ்பா 2, தியேட்டர் நெரிசல் : குணடைந்த சிறுவன் | நான் இன்னும் மிடில் கிளாஸ் தான்... என் சாதனைக்கு உரியவர் ஷாலினி : அஜித் பேட்டி | டெஸ்ட்டில் விட்டதை கேசரி சாப்டர் 2-வில் பிடிப்பாரா மாதவன் | 300 தியேட்டர்களில் வெளியாகும் டூரிஸ்ட் பேமிலி | அழகுக்காக அறுவை சிகிச்சையா : ரகுல் ப்ரீத் சிங் பதில் |
மலையாள நடிகர் பிரித்விராஜ் ஒரு பக்கம் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு இருக்கும்போதே இயக்குனராகவும் மாறினார். மோகன்லாலை வைத்து 'லூசிபர்' என்கிற ஹிட் படத்தை கொடுத்த அவர் அதன் பிறகு அவரை வைத்து 'ப்ரோ டாடி' என்கிற காமெடி படத்தை இயக்கினார். அடுத்ததாக தற்போது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக 'எம்புரான்' படத்தை இயக்கியுள்ளார். வரும் மார்ச் 27ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பிரித்விராஜ் பேசியபோது, “எனக்கு படப்பிடிப்புக்கான லொகேஷன்களை கண்டுபிடித்து உறுதி செய்வதும் அதற்கான திட்டங்களை வகுப்பதும் தான் சிரமமான பணி. ஆனால் திட்டங்களை வகுத்த பின்பு படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் எல்லாமே குறித்த நேரத்தில் நடைபெறுவதில் எந்த பிரச்னையும் ஏற்பட்டது இல்லை. என்னுடைய உதவியாளர்கள் அனைவரிடமும் என்னுடைய திட்டம் குறித்து மிகத் தெளிவாக விவரித்து விடுவேன். குறிப்பிட்ட நேரத்தில் டப்பிங், எடிட்டிங், மிக்ஸிங் என அனைத்து பணிகளும் முடித்தே ஆக வேண்டும்.
இப்படி திட்டமிட்டு செயல்பட்டதால் தான் என்னுடைய மூன்று படங்களையும் ரிலீஸுக்கு சில நாட்கள் முன்பே முடித்துவிட்டு டென்ஷன் இல்லாமல் புரமோஷன் நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன். கடைசி நேரத்தில் இன்னும் அந்த வேலை பாக்கி இருக்கிறது, இந்த வேலை பாக்கி இருக்கிறது என்கிற டென்ஷன் எதற்கு ? தெளிவான திட்டமிடல் இயக்குனருக்கு கட்டாயம் தேவை” என்று கூறினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் சுந்தர்.சி ஒரு பேட்டியில் கூறும்போது, தன்னுடைய அரண்மனை 3 படத்தை ரிலீஸுக்கு முதல் நாள் இரவு குடும்பத்துடன் தனிக்காட்சி திரையிட்டு பார்த்ததாகவும் அப்போது அதில் தான் எதிர்பார்த்த சவுண்ட் குவாலிட்டி மிஸ் ஆகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் இரவு 10 மணிக்கு மேல் சவுண்ட் ஸ்டுடியோக்கு சென்று அதன் பிறகு அந்த பிரச்னையை சரி செய்து மறுநாள் கடைசி நேரத்தில் தியேட்டர்களுக்கு படத்தின் பிரிண்ட் அனுப்பி வைத்ததாகவும் கூறியிருந்தார். இந்த கடைசி நேர டென்ஷன் எதற்காக, முன்கூட்டியே திட்டமிடலுடன் அனைத்து பணிகளையும் முடித்து விட வேண்டும் என்கிறார் சமீப காலத்தில்தான் டைரக்ஷனுக்குள் அடியெடுத்து வைத்தவரான பிரித்விராஜ். அவர் சொல்வதும் சரிதானே?