விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
வரும் மார்ச் 27ம் தேதி தெலுங்கில் நேரடியாக உருவான மிகப்பெரிய படங்களின் ரிலீஸ் என எதுவும் இல்லை. காரணம் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள 'எம்புரான்' மற்றும் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'வீர தீர சூரன்' என இரண்டு படங்களும் தெலுங்கில் மிகப்பெரிய அளவில் ரிலீசாக இருக்கின்றன. இதனால் இந்த வாரம் ரிலீஸாகின்ற நிதின் நடிப்பில் உருவாகியுள்ள 'ராபின் ஹூட்' திரைப்படம் ஒரு நாள் கழித்து மார்ச் 28ம் தேதி ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. வெங்கி குடுமுலா இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ரீ லீலா நடித்துள்ளார். அது மட்டுமல்ல முக்கிய இடத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பிரபல நட்சத்திர வீரராக வலம் வந்த டேவிட் வார்னரும் நடித்துள்ளார்.
சமீப வருடங்களாக இந்திய படங்களை குறிப்பாக தெலுங்கு படங்களை விரும்பி பார்க்க ஆரம்பித்துள்ள டேவிட் வார்னர், அல்லு அர்ஜுனின் புட்டபொம்மா பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டார். அதேபோல 'புஷ்பா 2' திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் புடவை அணிந்தது போல தானும் அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு ஆச்சரியம் அளித்தார்.
இந்த நிலையில் தான் இந்த 'ராபின் ஹூட்' படத்தின் மூலமாக ஒரு நடிகராகவும் தெலுங்கு திரையுலகில் நுழைந்துள்ளார் வார்னர். சமீபத்தில் இவரது பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் படம் விரைவில் ரிலீஸ் ஆவதை தொடர்ந்து படத்தின் ப்ரீ ரிலீஸ் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் வந்து இறங்கியுள்ளார் டேவிட் வார்னர்.