அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! |
நடிகர் திலகம் சிவாஜி 'நவராத்திரி' படத்தில் 9 வேடத்தில் நடித்தார். கமல்ஹாசன் 'தசாவதாரம்' படத்தில் 10 வேடத்தில் நடித்தார். ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்பே 1941ல் பி.யூ.சின்னப்பா 'ஆர்யமாலா' என்ற படத்தில் 10 வேடங்களில் நடித்தார். இந்த படம் பெரிய வெற்றி பெற்றது.
இதில் சின்னப்பா ஜோடியாக எம்.எஸ்.சரோஜினி நடித்தார். இவர்களுடன் என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா, டி.ஏ.மதுரம் உள்ளிட்டோர் நடித்தனர். பொம்மன் இரானி இயக்க, பக்ஷிராஜா பிலிம்ஸ் சார்பில் சின்னப்பாவே தயாரித்திருந்தார். காத்தவராயன், ஆர்யமாலாவின் புகழ்பெற்ற காதல் தான் படத்தின் கதை. பின்னர் மீண்டும் இதே படம் சிவாஜி நடிக்க 'காத்தவராயன்' என்ற பெயரில் தயாராகி 1958ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது.
பி.யூ.சின்னப்பாதான் முதன் முறையாக 'உத்தமபுத்திரன்' படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தார். 'மங்கையர்கரசி' படத்தில் முதன் முறையாக 3 வேடங்களில் நடித்தார். இன்று பி.யூ.சின்னப்பாவின் 73வது நினைவுநாள்.