நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா 2'. இப்படத்தை முதலில் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை என்பதால் படத்தை டிசம்பர் மாதம் 6ம் தேதி வெளியிடுகிறோம் என தள்ளி வைத்தார்கள்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இப்படம் குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகின. இயக்குனர் சுகுமார், படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நின்று விட்டது என்றும் செய்திகள் வெளியாகின. அதனால், படம் அடுத்த வருடத்திற்குக் கூட தள்ளிப் போக வாய்ப்பிருக்கிறது என்றார்கள்.
இதனிடையே, சற்று முன் படம் பற்றிய புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டார்கள். படம் வெளியாக இன்னும் 75 நாட்கள் இருக்கிறது என்பதற்கான அறிவிப்பு அது. இதன் மூலம் பட வெளியீடு குறித்து மீண்டும் உறுதி செய்துள்ளது படக்குழு.