'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
இந்தியன் -2 படத்தை அடுத்து தற்போது ராம்சரண் நடிப்பில் 'கேம் சேஞ்சர்' என்ற படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். இந்த படத்தை அடுத்து சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற நாவலை மையமாக வைத்து தனது அடுத்த படத்தை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளார் ஷங்கர். அதற்கான உரிமையை வாங்கி வைத்திருக்கிறார். ஆனால் இந்த நேரத்தில் அந்த நாவலின் காட்சிகளை தழுவி சில படங்களில் காட்சிகள் இடம் பெற்று வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதன் காரணமாகவே தனது சோசியல் மீடியாவில் அவர் ஒரு எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ''சு.வெங்கடேசன் அவர்களின் புகழ்பெற்ற தமிழ் நாவல் 'நவயுக நாயகன் வேள் பாரி'யின் பதிப்புரிமையை பெற்றுள்ளேன். ஆனால் இந்த நாவலின் முக்கிய காட்சிகள் அனுமதி இல்லாமல் சில படங்களில் பயன்படுத்தப்படுவதை பார்த்து வருத்தமாக உள்ளது. சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தின் டிரைலரில் வேள்பாரி நாவலின் முக்கியமான காட்சிகள் திருடப்பட்டு பயன்படுத்தப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
தயவு செய்து இந்த நாவலின் காட்சிகளை திரைப்படங்கள், வெப் சீரிஸ் மற்றும் எந்த ஒரு ஊடகத்திலும் பயன்படுத்த வேண்டாம். படைப்பாளிகளின் உரிமையை மதியுங்கள். அனுமதியின்றி காட்சிகளை தழுவி எடுக்க வேண்டாம். அப்படி யாராவது எடுத்தால் சட்டப்படி நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி வரும்,'' என்று இயக்குனர் ஷங்கர் அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.