'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை | துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன் | எண்பதுகளின் கதாநாயகியை நினைவூட்டும் அனுபமா; நடிகை கோமலி பிரசாத் பாராட்டு | 'லோகா 2' மற்றும் 'பிரேமலு 2'வில் நான் இருக்கிறேனா ? மமிதா பைஜூ பதில் | வயலில் நாற்று நட நெல்லை மக்கள் தந்த பயிற்சி: அனுபமா பரமேஸ்வரனின் 'பைசன்' அனுபவம் | உழைக்கும் கரங்கள், எஜமான், கண்ணப்பா - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வெள்ளிவிழா ஆண்டின் நிறைவில் விண்வெளி நாயகன் கமல்ஹாசனின் “தெனாலி” | நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு |
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2022ல் வெளியான சீதாராமம் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் பிரபலமாகி தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை மிருணாள் தாக்கூர். நேற்று இவரது பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்கள் பலரும் இவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கடந்த 2014லிலேயே சினிமாவில் நுழைந்து விட்ட இவர் ஆரம்பத்தில் மராத்தி படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு 2018ல் இருந்து தொடர்ந்து ஹிந்தியில் நடித்து வந்த இவர், சீதாராமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹாய் நன்னா, தி பேமிலி ஸ்டார் உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார், அடுத்ததாக தமிழிலும் இவர் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது,
இந்த நிலையில் சல்மான் கான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு மிருணாள் தாக்கூரின் கையை விட்டு நழுவி போன தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த 2016ல் சல்மான் கான் நடிப்பில் சுல்தான் என்கிற படம் வெளியானது. இந்த படத்தில் நடிப்பதற்காக ஆரம்பத்தில் மிருணாள் தாக்கூர் தான் அழைக்கப்பட்டார். ஆனால் படத்தின் கதாநாயகி ஒரு ஸ்போர்ட்ஸ் வீராங்கனை என்பதால் இவரது உடல்வாகும் உருவமும் அந்த கதாபாத்திரத்திற்கு அந்தசமயம் சரியாகப் பொருந்தவில்லை. அதனால் அந்த படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை அனுஷ்கா சர்மா. இந்த விஷயத்தை நடிகர் சல்மான் கானே பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கூறி இருந்தார்.