2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

நடிகர் திலீப் நடிப்பில் சமீப காலங்களில் வெளியான பாந்த்ரா, தங்கமணி, பவி கேர்டேக்கர் என அடுத்தடுத்த படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றன. முன்பெல்லாம் கதையில் கவனம் செலுத்திய நடிகர் திலீப் தற்போது கதைகளை தேர்வு செய்வதில் கோட்டை விடுகிறாரோ என்று அவரது ரசிகர்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தன்னுடைய அடுத்த படத்தை எப்படியேனும் வெற்றி படமாக கொடுத்து விட வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறார் திலீப். அந்த வகையில் அவர் தற்போது நடித்துவரும் படம் ‛பா பா பா'. இந்த படத்தில் திலீப்புடன், சகோதர நடிகர்களான வினித் சீனிவாசன் மற்றும் தியான் சீனிவாசன் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் தனஞ்செய் சங்கர் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தின் கதையை இயக்குனருடன் சேர்ந்து நடிகை நூரின் ஷெரீப் மற்றும் நடிகர் பஹிம் ஜாபர் இருவரும் இணைந்து உருவாக்கியுள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் ஒரு அடார் லவ் என்கிற படம் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து புருவ அழகி என புகழ்பெற்ற பிரியா பிரகாஷ் வாரியரை போலவே அதில் இன்னொரு கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் இந்த நூரின் ஷெரீப். கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு குட் பை சொல்லிவிட்டு தற்போது கதை, டைரக்சனில் கவனத்தை திருப்பியுள்ளார் நூரின் ஷெரீப். இவருடன் இணைந்து இந்த கதையை எழுதும் பஹிம் ஜாபர் இவரது காதல் கணவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.