சூரி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை! | ஒரு உயிர் பலி : சிறப்புக் காட்சிகளை ரத்து செய்தது தெலங்கானா அரசு | புஷ்பா 2 - முதல்நாள் வசூல் முதல் கட்டத் தகவல் | டொவினோ தாமஸின் ‛ஐடென்டிடி' டீசர் வெளியானது | அரபு நாடுகளில் புஷ்பா 2 படத்தின் 19 நிமிட காட்சிகள் நீக்கம் | சுரேஷ் கோபி மகனுக்கு சண்டை சொல்லித்தரும் மம்முட்டி | புஷ்பா 2 - அமெரிக்காவில் முதல் நாளில் 4 மில்லியன் வசூல் | பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ : தெலுங்கில் சாதிப்பாரா ஜோதி கிருஷ்ணா | இறுதிக்கட்டத்தில் 'திருவள்ளுவர்' படம் : இளையராஜா இசை | 'சூது கவ்வும் 2' : ஹரிஷா ஜஸ்டின் முதல் படம் 13ம் தேதி வெளியாகிறது |
மெர்சல், மாநாடு, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என பல படங்களில் வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யா தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன்-2, கேம் சேஞ்சர் மற்றும் ராயன் போன்ற படங்களிலும் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் குட் பேட் அக்லி படத்திலும் அவர் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், இந்தியன்-2 படத்தின் புரமோஷனில் இருந்த எஸ்.ஜே.சூர்யா அது குறித்து கூறுகையில், குட் பேட் அக்லி படத்தில் நடிப்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. அது குறித்த பேச்சுவார்த்தை முடிந்த பிறகு தான் அந்த படத்தில் நான் நடிக்கிறேனா இல்லையா என்பது தெரியவரும் என்று ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். மேலும், அஜித் நடித்த வாலி படம்தான் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.