சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை | 'தக் லைப்' டிரைலர் : 24 மணி நேர சாதனை என்ன? | 'ரெட்ரோ' 235 கோடி வசூல்: ஷாக் ஆன ரசிகர்கள் - உண்மை என்ன? | ஆறு மாத இடைவெளியில் அழகாக யோசிக்கும் ஆதிக் | விஜய்சேதுபதி சொன்ன சைக்கிள் கதை |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ். ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு, மிஷ்கின், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் எஸ். ஜே .சூர்யாவின் கெட்டப் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை பட நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த போஸ்டரில் கூலிங் கிளாஸ் அணிந்தபடி ஒரு மாஸான லுக்கில் காணப்படுகிறார் எஸ் .ஜே. சூர்யா. மேலும் இந்தப்படத்தின் டைட்டில், லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்று வைக்கப்பட்டு ‛எல்ஐசி' என்று சுருக்கமாக குறிப்பிட்டு வந்தவர்கள், அதற்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்று மாற்றி ‛எல்ஐகே' என்று டைட்டில் வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.