15 வயதில் என் போட்டோவை மார்பிங் செய்தனர் : ஜான்வி கபூர் வேதனை | சுந்தர்.சிக்கு ஆதரவாக விஷால்... எதிராக வடிவேலு? | டிரைலருக்கு தனி எடிட்டர் தேவையா? கேள்வி எழுப்பும் தயாரிப்பாளர் | 'யூத் 2' உருவாகுமா? கென் கையில் முடிவு | ஏப்ரல் 10ல் ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி | அடுத்த வாரிசு நடிகை… பிரியங்கா ராஜகுமாரன் | டாக்டர் ராஜசேகருக்கு 'கம்பேக்' கொடுத்த 'பைக்கர்' | மழையால் 'எல்ஐகே' விழா தள்ளி வைப்பு | விஜய் சுட்ட 13வது ஆள் நான் தான் : விக்னேஷ் சிவன் | ‛ரஞ்ஜன்' ஆன ‛கோர்ட்' : அப்பா தியாகராஜன் இயக்கத்தில் மகன் பிரசாந்த் நடிக்கிறார் |

தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்து வரும் அஜித் குமார், அடுத்தபடியாக கேஜிஎப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் நடிக்கப் போவதாக கடந்த சில தினங்களாக ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திரா அது குறித்து ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‛அஜித் - பிரசாந்த் நீல் இருவரும் சந்தித்தது உண்மைதான். ஆனால் அது மரியாதை நிமித்தமான சந்திப்பு. அந்த சந்திப்பின்போது இருவரும் ஒரே படத்தில் இணைந்து பணியாற்றுவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை' என்று தெரிவித்திருக்கிறார். இருப்பினும் ‛எதிர்காலத்தில் அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய ஆசை' என கூறியிருக்கிறார். இதன் மூலம் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அஜித் நடிப்பது உறுதியாகவில்லை என்பது தெரியவந்துள்ளது.