Advertisement

சிறப்புச்செய்திகள்

மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'டாக்சிக்' வீடியோவுக்கு எதிராக புகார்

13 ஜன, 2026 - 10:42 IST
எழுத்தின் அளவு:
Complaint-against-toxic-video
Advertisement

கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில், யஷ் நடிக்கும் 'டாக்சிக்' படத்தின் கதாநாயகன் அறிமுக வீடியோ ஒன்று கடந்த வாரம் வெளியிடப்பட்டது. மிகவும் ஆபாசமான படுக்கையறை காட்சியுடன் ஆரம்பமான அந்த வீடியோ கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோ யு டியூப் தளத்தில் தற்போது 85 மில்லியன் பார்வைகளையும், இதர சமூக வலைத்தளங்களில் சேர்த்து 200 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது.

அந்த வீடியோ குறித்து கர்நாடகா ஆம் ஆத்மி கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் லோஹித் ஹனுமபுர், கர்நாடகா மாநில மகளிர் ஆணையத்திடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். “டாக்சிக்' வீடியோவில் இடம் பெற்றுள்ள சில காட்சிகள் ஆட்சேபணைக்கு உரியவை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்,” என்றும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகா மாநில ஆம் ஆத்மி கட்சியின் மகளிர் பிரிவு செயலாளர் உஷா மோகன் இது குறித்த புகார் ஒன்றையும், மகளிர் ஆணையத்திடம் அளித்துள்ளார். அதில், “இந்தத் திரைப்படத்தின் டீசரில் உள்ள ஆபாசமான மற்றும் வெளிப்படையான உள்ளடக்கம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் சமூக நலனுக்கு தீவிரமான தீங்கு விளைவிக்கிறது. எந்த வயது தொடர்பான எச்சரிக்கையும் இல்லாமல் பொதுத் தளத்தில் வெளியிடப்பட்ட இந்தக் காட்சிகள், பெண்களின் கண்ணியத்தை இழிவுபடுத்துகின்றன மற்றும் கன்னட கலாச்சாரத்தை அவமதிக்கின்றன. மகளிர் ஆணையம் இதை தீவிரமான பிரச்சனையாகக் கருதி உடனடினயாக நடவடிக்கை எடுத்து மாநிலத்தின் கலாச்சாரம், மற்றும் நெறிமுறை மதிப்பைக் காக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

"சமூகத்தின் மீதான எதிர்மறையான தாக்கம், குறிப்பாக சிறார்களுக்கு" என்று குறிப்பிட்டு, மகளிர் ஆணையம், மாநில அரசு அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, டீசரை தடை செய்யவும், சமூக ஊடக தளங்களிலிருந்து அதை அகற்றவும் உத்தரவிடுமாறு வலியுறுத்தியுள்ளது.

இப்படத்தை மலையாள திரையுலகத்தைச் சேர்ந்த பெண் இயக்குனரான கீத்து மோகன்தாஸ் இயக்கியுள்ளார். இதற்கு முன்பு வேறு சில திரைப்படங்களில் பெண்களை அவமதிக்கும் காட்சிகள் இடம் பெற்றபோது அதற்கு எதிராக மற்ற மலையாள நடிகைகளுடன் சேர்த்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். ஆனால், அவரே இப்போது பெண்ணை போகப் பொருளாகக் காட்டியிருப்பது சரியா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நகைச்சுவை  வேடத்தில் நடிக்க சிரமப்பட்ட மீனாட்சி சவுத்ரிநகைச்சுவை வேடத்தில் நடிக்க ... திடீரென பட்டியலில் வந்த 2026 பொங்கல் ரிலீஸ் படங்கள் : போதிய தியேட்டர்கள் கிடைக்குமா...? திடீரென பட்டியலில் வந்த 2026 பொங்கல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap