சின்னத்திரையில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் இல்லையே.. .. | மாடுகளை நானே குளிப்பாட்டுவேன்: அட...டா... அதுல்யா | 'ஜனநாயகன், டாக்சிக்' : அடுத்தடுத்த சர்ச்சையில் தயாரிப்பு நிறுவனம் | அவதூறு பரப்பும் விஜய் ரசிகர்கள்! - சாடிய இயக்குனர் சுதா கொங்கரா | அல்லு அர்ஜூனின் 23வது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்; அறிவிப்பு வெளியானது | பராசக்தி என் நடிப்புக்கான முழுமையான அங்கீகாரத்தை கொடுத்து விட்டது! -ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | தனுஷ் 54வது படத்தின் புதிய அப்டேட்: நாளை பொங்கல் தினத்தில் வெளியாகிறது! | பொங்கல் பண்டிகையை தித்திப்பாக்கும்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | மீண்டும் இணைந்த 'தகராறு' கூட்டணி! | சம்மர் 2026ல் ரிலீஸ்: உறுதிப்படுத்திய அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் படம்! |

ரஜினிகாந்த் ஏராளமான தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவர் மலையாள படங்களில் அந்த அளவிற்கு நடிக்கவில்லை. எதார்த் சினிமா ரசிகர்களாக மலையாளிகள் இருந்ததால் ரஜினியின் ஆக்ஷன் படங்களுக்கு அங்கு பெரிய வரவேற்பு இருக்காது என்பதாலேயே அவர் நடிக்கவில்லை.
என்றாலும் 1979ம் ஆண்டு கமலுடன் இணைந்து நடித்த திரைப்படம் 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் படமாக்கப்பட்டது. இரண்டு மொழிகளிலுமே இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்த படம் 'ஆயிரம் இரவுகள்' என்ற அரேபிய கதை தொகுப்பில் உள்ள ஒரு கதையாகும். அந்த கதையில் இல்லாத ஒரு கேரக்டரை ரஜினிக்காக உருவாக்கி நடிக்க வைத்தனர். ஐ.வி.சசி இயக்கினார்.
1981ம் ஆண்டு 'கர்ஜனை' படம் வெளிவந்தது. சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், மாதவி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் ஒரே நேரத்தில் மலையாளத்தில் 'கர்ஜனம்' என்றும் கன்னடத்தில் 'கர்ஜனே' என்றும் படமாக்கப்பட்டது.
மலையாள பதிப்பில் அங்கு அப்போது ஆக்ஷன் ஹீரோவாக இருந்த ஜெயன் நடிப்பதாக முடிவாகி சில காட்சிகளும் படமாக்கப்பட்டது. ஆனால் அவர் எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி இறந்ததால், மலையாளத்திலும் ரஜினியே நடித்தார். தமிழைப்போலவே மலையாளத்திலும் வெற்றி பெற்றது. ஆனால் அதன்பிறகும் மலையாளத்தில் ரஜினி நடிக்கவில்லை.