நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தமிழில் தற்போது வில்லன், குணச்சித்திர நடிகர் என மாறி மாறி பயணித்துக் கொண்டிருப்பவர் எஸ்ஜே சூர்யா. நானி நடித்துள்ள 'சரிபோத சனிவாரம்' என்ற படத்தில் வில்லத்தனமான இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் எஸ்ஜே சூர்யா நடித்துள்ளார். இப்படம் தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது.
இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது எஸ்ஜே சூர்யா, கதை எழுதி இயக்க முடியாமல் போன பவன் கல்யாண் படம் ஒன்றைப் பற்றிய தகவலைப் பகிர்ந்து கொண்டார்.
தமிழில் விஜய், ஜோதிகா நடித்து வெளிவந்து வெற்றி பெற்ற 'குஷி' படத்தை அதே பெயரில் தெலுங்கில் பவன் கல்யாண், பூமிகா நடிப்பில் ரீமேக் செய்து இயக்கினார் எஸ்ஜே சூர்யா. அப்படம் தெலுங்கிலும் பெரிய வெற்றியைப் பெற்றது. பவன் கல்யாணின் முக்கியமான படங்களில் அந்தப் படத்திற்கும் ஒரு இடமுண்டு. அதன்பின் பவன் கல்யாண் நடித்த 'கொமரம் புலி' என்ற படத்தை இயக்கினார் சூர்யா. ஆனால், அது தோல்விப் படமாக அமைந்தது.
அதற்கடுத்து பவன் கல்யாணுக்காகவே தெலுங்கு கற்றுக் கொண்டு தெலுங்கில் ஒரு காதல் கதையை எழுதினாராம். அக்கதை பவன் கல்யாணுக்குப் பிடித்துப் போனாலும் வேறு படங்களின் காரணமாக ஆரம்பிக்க முடியாமல் போய் இருக்கிறது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு அந்தப் படத்தை ஆரம்பிக்கலாம் என நினைத்த போது காதல் கதைகள் தனக்கு இனி பொருத்தமாக இருக்காது என பவன் கல்யாண் நடிக்க மறுத்துவிட்டாராம். அந்தக் கதையில் மட்டும் அவர் நடித்திருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார் சூர்யா.