'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் இசையமைப்பில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா மற்றும் பலர் நடிக்கும் படம் 'தி கோட்'. இப்படம் செப்டம்பர் 5ம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது.
பொதுவாக முன்னணி நடிகர்களின் தமிழ்ப் படங்களுக்கான பிரிமியர் காட்சிகள் அமெரிக்காவில் இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கே நடக்கும். ஆனால், 'தி கோட்' படத்திற்கான அமெரிக்கா பிரிமியர் காட்சிகளை அந்த நேரத்தில் திரையிட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அனுமதிக்கவில்லையாம். இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு, அதாவது அமெரிக்க நேரப்படி இரவு 9.30 மணிக்கு மட்டுமே திரையிட அனுமதி அளித்துள்ளார்களாம்.
இதன் காரணமாக அமெரிக்க பிரிமியர் வசூலில் பாதிப்பு ஏற்படும் என அமெரிக்க வினியோகஸ்தர் தன்னுடைய வருத்தத்தை எக்ஸ் தளத்தில் வெளிப்படையாகப் பதிவிட்டுள்ளார்.
மேலும் அமெரிக்க வினியோகஸ்தரான அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'தி கோட்' சம்பந்தப்பட்ட எக்ஸ் தளப் பதிவுகளில் படத் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் பெயரைக் குறிப்பிடுவதில்லை. அதற்கு அந்நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி, “இப்படத்திற்கான வினியோகஸ்தரான நீங்கள், தயாரிப்பு நிறுவனத்தின் பெயரைக் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும்,” என்று கமெண்ட் செய்துள்ளார். தயாரிப்பாளரும், வினியோகஸ்தரும் இப்படி ஒருவரை மாற்றி மற்றொருவர் கமெண்ட் செய்து கொள்வதால் அவர்களுக்கிடையே ஏதும் மோதலா என பேச ஆரம்பித்துவிட்டார்கள்.