போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
டாப் நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது அதற்கு முன்பாக வெளியான படங்களின் ஓட்டம் நிறைவடைவது வழக்கம். ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' நேற்று வெளியான போதும், விஜய் நடித்து கடந்த மாதம் 5ம் தேதி வெளிவந்த 'தி கோட்' படமும், தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடித்து கடந்த மாதம் 20ம் தேதி வெளிவந்த 'லப்பர் பந்து' படமும் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்றன.
'தி கோட்' படம் 6வது வாரத்திலும், 'லப்பர் பந்து' படம் 4வது வாரத்திலும் நுழைந்துள்ளன. இதில் 'லப்பர் பந்து' படத்திற்கான காட்சிகள் 'தி கோட்' படத்திற்கான காட்சிகளை விடவும் அதிகமாக உள்ளன. மேலும், அதிகமான அளவில் டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் வெளியான படங்களில் இந்த இரண்டு படங்கள்தான் வசூல் ரீதியாக திருப்தியைக் கொடுத்த படங்களாக உள்ளன.
கார்த்தி, அரவிந்த்சாமி நடித்து வெளிவந்த 'மெய்யழகன்' படம் 3வது வாரத்தில் குறிப்பிடத்தக்க காட்சிகளுடன் நுழைந்தாலும் மேலே குறிப்பிட்ட படங்களை விடவும் வரவேற்பு சற்றே குறைவாகவே இருந்து வருகிறது. இந்த வார இறுதி வரை இந்த மூன்று படங்களும் தாக்குப் பிடித்து ஓடிவிடும் என்றே தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.