தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! |
ஆஸ்கர் விருதுகளுக்கு இணையாக சினிமா படைப்பாளிகள் கருதுவது கிராமி விருதுகளை தான். அந்த வகையில் வரும் பிப்ரவரி மாதம் 67வது கிராமி விருது விழா நடைபெற இருக்கிறது. இதற்காக உலகெங்கிலும் உள்ள படைப்பாளிகள் தங்களது படைப்புகளை பல்வேறு பிரிவுகளில் கலந்து கொள்ளும் விதமாக அனுப்பி வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் மற்றும் ஆவேசம் ஆகிய படங்கள் கிராமி விருதுகளுக்கான இசைப்பிரிவு போட்டிகளில் கலந்து கொள்ள அனுப்பி வைக்கப்பட்டன. இந்த இரண்டு படங்களின் இசையமைப்பாளர் சுஷின் சியாம் இந்த தகவலை சமீபத்தில் தான் வெளியிட்டு இருந்தார்.
அதேபோல கிட்டத்தட்ட 28 வருடங்களுக்கு பிறகு மலையாளத் திரையுலகில் மீண்டும் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த ஆடுஜீவிதம் படமும் கிராமி விருதுகளுக்கான குறிப்பிட்ட பிரிவில் பங்கேற்குமாறு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் அது கிராமி தேர்வு கமிட்டியால் நிராகரிக்கப்பட்டது. சமீபத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இதுகுறித்து அளித்த பேட்டியில், “ஆடு ஜீவிதம் படத்தின் சவுண்ட் ட்ராக் அதில் கலந்து கொள்ள நிர்ணயிக்கப்பட நேரத்தை (நீளத்தை) விட ஒரு நிமிடம் குறைவாக இருந்ததால் தேர்வுக் குழுவினரால் நிராகரிக்கப்பட்டது. ஆஸ்கர் விருது போல அல்ல கிராமி விருது. அதில் ஏகப்பட்ட விதிமுறைகள் இருக்கின்றன. அவற்றை 100 சதவீதம் பூர்த்தி செய்தால் மட்டுமே அதில் கலந்து கொள்ள முடியும். மற்றபடி விருதுகளை இலக்காக வைத்து செயல்படுவது என் நோக்கம் அல்ல” என்று கூறியுள்ளார்.