நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மோகன்லால் தற்போது மலையாளத்தில் பிரித்விராஜ் டைரக்ஷனில் நடித்து வரும் லூசிபர் இரண்டாம் பாகமான 'எம்புரான்' படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் அந்த படத்தின் படப்பிடிப்பு வெவ்வேறு கட்டமாக நடக்க இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் மோகன்லால் நடித்து வரும் அவரது 360வது படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் துவங்கி உள்ளது.
இந்த படத்தில் மோகன்லாலுடன் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கிறார் நடிகை ஷோபனா. இந்த படத்தை தருண் மூர்த்தி என்பவர் இயக்குகிறார்.. இவர் கடந்த இரண்டு வருடங்களில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்த ஆபரேஷன் ஜாவா மற்றும் சவுதி வெள்ளக்கா ஆகிய படங்களை இயக்கியவர். மோகன்லால் இந்த படத்தில் ஒரு பழைய அம்பாசிடர் கார் ஓட்டும் சண்முகம் என்கிற டிரைவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.