காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்…இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் | புதிய அப்டேட் கொடுத்த ராஜமவுலி | 55 வயதான கேஜிஎப் நடிகர் புற்றுநோயால் மரணம் | பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு |

ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் 'வேட்டையன்'. இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வழக்கம் போல அமெரிக்காவில் உள்ள ரஜினி ரசிகர்கள் பிரிமியர் காட்சிகள், முதல் நாள் காட்சிகளை வழக்கம் போல ஆர்வத்துடன் வந்து பார்த்துள்ளனர்.
முதல் நாள் வசூலாக மொத்தம் ஒரு மில்லியன் யு எஸ் டாலர் வசூலை இப்படம் கடந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 8 கோடியே 40 லட்சம். இதுவரை அமெரிக்காவில் வெளியான ரஜினி படங்களில் 10 படங்கள் ஒரு மில்லியன் வசூலைக் கடந்த படங்களாக உள்ளன. இந்த வார இறுதியில் 'வேட்டையன்' வசூல் இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அளவில் முதல் நாள் மொத்த வசூல் பற்றிய அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.