ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி இணைந்து நடித்து உருவாகியுள்ள படம் ' விடுதலை 2' . இப்படம் டிசம்பர் 20ம் தேதி திரைக்கு வருவதையொட்டி தற்போது இப்படத்தை தெலுங்கில் விளம்பரப்படுத்தி வருகிறார் விஜய் சேதுபதி.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிற்கு பிறகு சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்தார் விஜய் சேதுபதி. அப்போது அவரிடம் 'கங்குவா' மற்றும் 'தி கோட்' தோல்வி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, “இங்கு எனது படத்தை விளம்பரப்படுத்த வந்திருக்கிறேன். நான் எதற்கு மற்ற படங்களின் வெற்றி, தோல்வி பற்றி பேச வேண்டும்?
பலர் வியாபாரம் துவங்குகிறார்கள், அனைவருமே வெற்றியடைவதில்லை. ஆனால், அனைவருமே வெற்றியடைய வேண்டும் என்று தான் தொடங்குகிறார்கள். அதேபோல் தான் ஒவ்வொரு படமும் வெற்றியடைய வேண்டும் என்றே தான் தொடங்கப்படுகிறது,.” என பதிலளித்துள்ளார் விஜய் சேதுபதி. மேலும், இந்தப் பேட்டிக்குப் பிறகு எந்தவொரு சேனலுக்குமே பேட்டியளிக்காமல் விஜய் சேதுபதி வெளியேறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.