ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சூர்யா, பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் மே 1ம் தேதி வெளியாக உள்ள படம் 'ரெட்ரோ'.
இப்படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் இரவு யு டியூப் தளத்தில் வெளியிடப்பட்டது. முதல் முறையாக கார்த்திக் சுப்பராஜ், சூர்யா இப்படத்தில் கூட்டணி சேர்ந்திருப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு உள்ளது.
இப்படத்தின் பாடலான 'கனிமா' பாடல் பெரும் வரவேற்பைப் பெற்று தற்போது 37 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. எப்படியும் 100 மில்லியன் பார்வைகளை அடுத்த சில மாதங்களில் கடந்துவிடும்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியான இப்படத்தின் டிரைலர் எதிர்பார்த்ததை விடவும் குறைவான பார்வைகளையே பெற்றுள்ளது. சூர்யா நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'கங்குவா' பட டிரைலர் 24 மணி நேரத்தில் 19 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. ஆனால், 'ரெட்ரோ' டிரைலர் 10 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளது.
தெலுங்கில் இதன் டிரைலர் 18 லட்சம் பார்வைகளையும், ஹிந்தியில் 20 லட்சம் பார்வைகளையும் பெற்றுள்ளது.