சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
‛ஜோக்கர், ஆண் தேவதை' உள்பட சில படங்களில் நடித்த ரம்யா பாண்டியன், பிக்பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானார். இந்நிலையில் பெங்களூரில் யோகா பயிற்சிக்கு சென்றபோது யோகா மாஸ்டர் லோவல் தவான் என்பவருடன் ரம்யா பாண்டியனுக்கு காதல் ஏற்பட்டது. அதையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2024ம் ஆண்டு ரிஷிகேஷில் அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். அதன் பிறகும் சோசியல் மீடியாவில் தனது புகைப்படம் வீடியோக்களை வெளியிட்டு வரும் ரம்யா பாண்டியன், சமீபத்தில் திருவண்ணாமலை கோவில் கிரிவலத்தின்போது தனக்கு கிடைத்த பவர் குறித்த தகவலையும் வெளியிட்டிருந்தார்.
இப்படியான நிலையில் சோசியல் மீடியாவில் ரம்யா பாண்டியனுக்கு வரதட்சணை கொடுத்து லோவல் தவான் திருமணம் செய்து கொண்டதாக ஒரு செய்தி வைரலாகி வந்தது. இதற்கு தற்போது விளக்கம் கொடுத்து ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார் ரம்யா பாண்டியன். அந்த வீடியோவில், ‛‛என்னைப் பொறுத்தவரை பள்ளியில் படிக்கிற காலங்களில் இருந்தே எனது செலவுகளை நான்தான் பார்த்துக் கொண்டு வருகிறேன். காலேஜ் முடிந்த பிறகும் வேலை பார்த்து சம்பாதித்து வந்தேன். சினிமாவில் நடித்த காலகட்டத்தில்தான் நான் எந்த வேலையும் செய்யவில்லை. ஆனால் இப்போது கூட எனது செலவையும் வீட்டையும் நான் பார்த்துக் கொண்டு வருகிறேன்.
அதுமட்டுமின்றி என்னுடைய திருமணத்தின்போது கூட மாப்பிள்ளை வீட்டில் பாதி செலவும், எங்கள் வீட்டில் பாதி செலவும் செய்தோம். ஆனால் நிலைமை அப்படி இருக்கும்போது, எனக்கு வரதட்சணை கொடுத்து அவர்கள் திருமணம் செய்து கொண்டதாக செய்தி வெளியாகி வருவது மனசுக்கு கஷ்டமாக உள்ளது. குறிப்பாக, மாப்பிள்ளை தரப்பு வழக்கப்படி தங்களது வீட்டுக்கு வரும் மணப்பெண்ணுக்கு ஆடை, நகைகளை எல்லாம் கொடுத்துத்தான் அழைப்பார்களாம்.
இது நம்முடைய மரபு இல்லை என்றாலும் அவர்களுக்காக அந்த பழக்கத்தை மதித்து நாங்கள் ஏற்றுக் கொண்டோம். ஆனால் இதை வைத்து ரம்யாபாண்டியனுக்கு வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து கொண்டதாக யாரும் செய்தி வெளியிடாதீர்கள். நம்முடைய பழக்கவழக்கங்களை அவர்கள் மதிப்பது போன்று அவர்களது பழக்க வழக்கங்களையும் நாம் மதிக்க வேண்டும். அதுதான் எங்கள் திருமணத்தில் நடைபெற்றது'' என்று அந்த வீடியோவில் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் ரம்யா பாண்டியன்.