2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் படம் ராயன். ஜூலை 26ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், டிரைலரும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ராயன் படத்தில் தான் நடித்துள்ள கேரக்டருக்காக ஒரே நாளில் டப்பிங் பேசி முடித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதோடு இப்படத்தில் ராயபுரத்தில் ஓநாய் போன்று சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு வில்லன் கேரக்டரில் தான் நடித்துள்ளதாக கூறும் எஸ். ஜே. சூர்யா, இப்படத்தில் எனக்கு பெரும்பாலான காட்சிகளில் முக பாவனைகள் மட்டுமே உள்ளன. அதனால் குறைவான வசனம் என்பதால் ஒரே நாளில் டப்பிங் பேசி முடித்து விட்டேன் என்றும் தெரிவித்து இருக்கிறார்.