அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

சில்லு கருப்பட்டி, ஏலே போன்ற படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். இவர் மின்மினி என்ற படத்தை கடந்த சில ஆண்டுகளாகவே இயக்கி வருகிறார். கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு குழந்தை நட்சத்திரங்களுடன் மின்மினி என்ற படத்தை இயக்கிய ஹலிதா, அந்த ஆறு குழந்தை நட்சத்திரங்களும் வளர்ந்து இளைஞர்கள் ஆகும் வரை காத்திருந்து படத்தின் இரண்டாம் பாதியை மீண்டும் அவர்களை வைத்தே இயக்கி உள்ளார்.
இந்நிலையில் தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் ஆகஸ்ட் மாதம் மின்மினி படம் ரிலீஸ் என்று ஒரு போஸ்டருடன் அறிவித்துள்ளார் இயக்குனர் ஹலிதா. ‛ஒரு வழியா என்னால அப்டேட் கொடுக்க முடிந்தது. அதிக ஆண்டுகள் எதிர்பார்த்து சோர்ந்து போகாமல், அதே வேகத்துடன் நேற்று மெசேஜ் அனுப்பிய அனைவருக்கும் நன்றி. மின்மினியை மேற்கொண்டு மிளிர செய்யுங்கள் திரைக்கு வருகை தந்து. அடுத்த மாதம் சந்திப்போம்' என்றும் அவர் பதிவிட்டு இருக்கிறார்.