ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா |
இயக்குநர் விவேக் ஆத்ரேயா, டிவிவி என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் பான் இந்தியா படம் ‛சூர்யாவின் சனிக்கிழமை'. தெலுங்கு, தமிழில் தயாராகும் இந்த படம் மற்ற மொழிகளிலும் வெளியாகிறது. நானி, பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சாய் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முரளி.ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். விவேக் ஆத்ரேயா இயக்குகிறார்.
தற்போது இதன் படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தை நெருங்கி இருப்பதாகவும், வருகிற ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி வெளியிட இருப்பதாகவும் புதிய தகவல்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இதுவரை நானியை முரட்டுத்தனமான இளைஞராக சித்தரித்து வந்த படத்தின் போஸ்டர்களில் இருந்து மாறுபட்டு அவர் ஒரு சாதாரண நடுத்தர இளைஞராக சித்தரித்து தற்போது போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.