சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

'சில்லு கருப்பட்டி', 'ஏலே' போன்ற படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். கடந்த 2015ம் ஆண்டில் இவரது இயக்கத்தில் 'மின்மினி' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இது குழந்தைகளாக இருந்து இளம் பருவத்தினராக மாறும் கதைகளத்தை கொண்ட படம் என்பதால், 2015-ம் ஆண்டு அந்த குழந்தைகளின் குழந்தைப் பருவம் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கிவிட்டார். அதன் பிறகு அந்த குழந்தைகள் கதாபாத்திரங்கள் இளம் பருவத்தை அடையும் வரை கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் காத்திருந்து, அவர்களின் இளம் பருவத்தின் தோற்றத்தை தத்ரூபமாக திரையில் கொண்டுவரும் வகையில் கடந்த ஆண்டில் மீண்டும் 'மின்மினி' படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என அறிவித்தது தொடர்ந்து இப்போது இத்திரைப்படம் ஆகஸ்ட் 9ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.