'மகாராஜ்' படத்தில் சர்ச்சை காட்சியில் நடித்தது ஏன்: ஷாலினி பாண்டே விளக்கம் | தனுஷ் ஒரு மிகச் சிறந்த மனிதர்! - சொல்கிறார் ரோபோ சங்கர் | 45வது படத்தில் வக்கீலாக நடிக்கும் சூர்யா! | டிச.,18ல் ஓடிடியில் வெளியாகும் ‛கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ்' | இயக்குனர் கே. எஸ். ரவிக்குமாரின் தாயார் மரணம்! | விடாமுயற்சி டப்பிங் பணிகளை தொடங்கிய அஜித்குமார்! | ரஜினி பிறந்த நாளில் கீர்த்தி சுரேஷ் திருமணம்! | கூலி படத்தில் இணைந்த ரெபா மோனிகா ஜான், சந்தீப் கிஷன் | பாலிவுட்டில் அறிமுகமாகும் பஹத் பாசில் | 4கே-வில் ரீ-ரிலீஸ் ஆகும் வேலையில்லா பட்டதாரி தெலுங்கு பதிப்பு |
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது நடிகராக தனது 25வது படமான 'கிங்ஸ்டன்' எனும் படத்தில் நடித்து வருகிறார். கமல் பிரகாஷ் இயக்கும் இப்படத்தில் திவ்ய பாரதி கதாநாயகியாக நடிக்கின்றார். ஜி.வி.பிரகாஷின் பேர்லல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படம் முதல் இந்திய கடலில் நடக்கும் அட்வென்ச்சர் ஹாரர் திரைப்படமாகும். கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு கப்பல் அரங்கம் அமைத்து நடத்தி வந்தனர். சில காட்சிகளின் படப்பிடிப்பு கடலில் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இப்படத்தை வருகின்ற அக்டோபர் மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.