15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் |
தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் திரைக்கு வந்ததை அடுத்து புதுமுகங்களை வைத்து அவர் இயக்கி வரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் அடுத்தகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைத்திருக்கும் ஜி.வி. பிரகாஷ் குமார் அப்படம் குறித்த ஒரு அறிவிப்பை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகிறது. இந்த பாடலை தனுஷ் பின்னணி பாடி இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இதேப்போல் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் தங்கலான். ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வரும் இந்த படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் அடுத்த சிங்கிள் பாடலும் விரைவில் வெளியாக இருப்பதாக இன்னொரு பதிவும் போட்டுள்ள ஜி.வி.பிரகாஷ்.