சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடந்த மார்ச் ஏழாம் தேதி திரைக்கு வந்த படம் 'கிங்ஸ்டன்'. இது அவரது 25வது படமாகும். கமல் பிரகாஷ் என்பவர் இயக்கிய இந்த படத்தில், திவ்யா பாரதி, நிதின் சத்யா, சேத்தன், அழகம்பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். ஆனால் இந்த படத்தின் திரைக்கதையில் சுவராஸ்யம் இல்லாததால் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது. அதோடு 20 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் திரைக்கு வந்த முதல் நாளில் 90 லட்சம் ரூபாய் வசூலித்த நிலையில் ஒரு வாரத்தில் நான்கரை கோடி மட்டுமே வசூலித்துள்ளது.
அதோடு இன்று பல புதிய படங்கள் ரிலீஸ் ஆகி இருப்பதால் பெரும்பாலான தியேட்டர்களில் 'கிங்ஸ்டன்' படத்தை எடுத்து விட்டார்கள். அந்த வகையில் தனது 25வது படமான இந்த கிங்ஸ்டன் தனது கேரியரில் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்த்த ஜி.வி.பிரகாஷ்க்கு இப்படம் அதிர்ச்சி தோல்வியாக அமைந்திருக்கிறது. இதையடுத்து அவர், சீனு ராமசாமி இயக்கும் 'இடி முழக்கம்' என்ற படத்தில் தற்போது நடத்தி வருகிறார்.




