கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் 'குட் பேட் அக்லி'. இப்படம் அடுத்த மாதம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ளது. அஜித்தின் முந்தைய படமான 'விடாமுயற்சி' தோல்வியடைந்ததால் இந்தப் படத்தை அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.
இந்நிலையில் இப்படத்தின் கதைச்சுருக்கம் வெளியாகி உள்ளது. “ஒரு தாதா அவருடைய வன்முறை வாழ்க்கையிலிருந்து விலகி, தனது குடும்பத்துடன் அமைதியாக வாழ முயற்சிக்கிறார். ஆனால், கடந்த காலத்தில் அவர் செய்த மிருகத்தனமான செயல்கள் அவரைப் பின் தொடர்கின்றன. அவற்றை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் தயாராகிறார்,” என்பதுதான் அந்த கதைச் சுருக்கம்.
அதைப் பார்த்ததுமே அனைத்து ரசிகர்களுமே விஜய் நடித்து வெளிவந்த 'லியோ' படத்தின் கதையும் இதுதானே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். பட வெளியீட்டிற்கு முன்பே இப்படி வரும் நெகட்டிக் கமெண்ட்களை படக்குழு எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
'குட் பேட் அக்லி' படம் அஜித்திற்கு ஒரு வெற்றிப் படமாக அமைந்தே ஆக வேண்டும்.