ரஜினி மாமனாராக நடிக்க வேண்டியது : திண்டுக்கல் லியோனி சொன்ன புது தகவல் | 25 வருடங்களுக்கு முன்பே ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய பார்த்திபன் | டிசம்பர் 12ல் அறிவித்த படங்கள் சிக்கலின்றி வெளியாகுமா ? | தீவிர கதை விவாதத்தில் படையப்பா 2ம் பாகம் : ரஜினிகாந்த் புதிய தகவல் | ஜனநாயகன் : வியாபாரத்தில் நீடிக்கும் தடுமாற்றம் ? | அதிசயம், ஆனால், உண்மை… : 'படையப்பா' ரீரிலீஸுக்கு ரஜினிகாந்த் பேட்டி | கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் |

1997ம் ஆண்டு வெளியான கங்கா கவுரி படத்தில் நடித்தார் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி. இப்போது அவர் மகன் லியோ சிவா மாண்புமிகு பறை என்ற படத்தில் ஹீரோ. தனது சினிமா அனுபவம் குறித்து லியோனி கூறுகையில், கங்கா கவுரியில் அன்போடு நடிக்க அழைத்தார்கள். அடுத்து பல வாய்ப்பு வந்தது. அப்போது பள்ளியில் ஆசிரியர் ஆக வேலை செய்து வந்தேன். அது நடிக்க தடையாக இருந்தது. பாரில் சரக்கு அடிக்கிற கேரக்டர் வந்தது. அதை பார்த்தால் மாணவர்கள் கிண்டல் செய்வார்கள். ஆசிரியர் வேலையா? நடிப்பா என்ற நிலை வந்த போது வேலையில் தொடர முடிவு செய்தேன். அடுத்து பட்டிமன்றத்தில் பிஸி ஆனதால் நடிக்க முடியவில்லை. சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் மாமனாராக நடிக்க கூட வாய்ப்பு வந்தது. என்னால் நடிக்க முடியவில்லை. இப்போது என் மகன் நடிக்கிறார். நானும் சில படங்களில் நடிக்கிறேன். மாண்புமிகு பறை படத்திற்கு தேவா இசையமைக்கிறார். அவருக்கு இன்னும் தேசிய விருது கிடைக்காதது வருத்தம்'' என்றார்.