செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் அவ்வப்போது ஹிந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். 'ராஞ்சனா, ஷமிதாப், அத்ராங்கி ரே' படங்களுக்குப் பிறகு தனுஷ் தற்போது நடித்து வரும் ஹிந்திப் படம் 'தேரே இஷ்க் மெய்ன்'.
'ராஞ்சனா, அத்ராங்கி ரே' படங்களை இயக்கிய ஆனந்த் எல் ராய் தான் இப்படத்தையும் இயக்கி வருகிறார். கிரித்தி சனோன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
நேற்றைய ஹோலி கொண்டாட்டத்தை இயக்குனர் ஆனந்த், தனுஷ், கிரித்தி ஆகியோர் இணைந்து கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள கிரித்தி, “லைட்ஸ், கேமரா, ஹோலி… நிறங்கள் குறைந்தாலும் காதல் அதிகம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
பல ஹிந்தி நடிகர்கள், நடிகைகள் அவர்களது ஹோலி கொண்டாட்டப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.