செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
தெலுங்கு நடிகரும், முன்னாள் அரசியல்வாதி, முன்னாள் மத்திய அமைச்சருமான சிரஞ்சீவிக்கு 'யுனைட்டட் கிங்டம்' பார்லிமென்ட்டில் மார்ச் 19ம் தேதி பாராட்டு விழா நடைபெற உள்ளது. சமுதாயத்திற்கு சிறப்பான பங்காற்றியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. பார்லிமென்ட் உறுப்பினர்களால் இந்த விழா ஏற்பாடு செய்யப்படடுள்ளது.
'பிரிட்ஜ் இந்தியா' அமைப்பும், சிரஞ்சீவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கவுரவிக்க உள்ளது. இது சினிமாவிற்காக மட்டுமல்லாமல், பொது சேவைக்காகவும், கலாச்சார தலைமைத்துவத்திற்காகவும் வழங்கப்படுகிறது.
சமீபத்தில் யுகே குடியுரிமை சிரஞ்சீவிக்கு மரியாதை நிமித்தமாக வழங்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், அதை அவரது குழுவினர் மறுத்தனர். செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு அதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில் தற்போது சிரஞ்சீவிக்கு பாராட்டும், விருது வழங்குவதும் நடைபெற உள்ளது.