காந்தாரா சாப்டர் 1 படத்தில் மோகன்லாலுக்கு பதிலாக ஜெயராம் | அல்லு அர்ஜுனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியானது | சூர்யா படத்தை அடுத்து பிரதீப் ரங்கநாதன் படத்திற்கும் இசையமைக்கும் சாய் அபயங்கர் | ருக்மிணி வசந்த் பிறந்தநாள் : ‛ஏஸ்' முன்னோட்ட வீடியோ வெளியீடு | வடிவேலுக்கு எதிராக வாய் திறக்கமாட்டேன் : கோர்ட்டில் நடிகர் சிங்கமுத்து உத்தரவாதம் | சூர்யா 45வது படத்தில் விஜய் சேதுபதி? | காளிதாஸ் ஜெயராமிற்கு முதல்வர் நேரில் வாழ்த்து | பரத் படத்தில் 20 நிமிட காட்சியை நீக்கியும் 'ஏ' சான்றிதழ்: தயாரிப்பாளர் புகார் | பிளாஷ்பேக்: இசை அமைப்பாளர் ரகுவரன் | ராகவா லாரன்ஸிற்கு வில்லனாகும் மாதவன் |
மீசையை முறுக்கு பட நடிகர் ஆனந்த் முதல் முறையாக இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள படம் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு'. இதில் குமரவேல், ஆர்.ஜே.விஜய், பவானி ஸ்ரீ, இர்பான், கே.பி.ஒய் பாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை மசாலா பாப்கார்ன் நிறுவனம் தயாரித்துள்ளனர். இயக்குனர் வெங்கட் பிரபு இப்படத்தை வழங்குகிறார்.
ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள், டிரைலர் மற்றும் விளம்பரங்கள் போன்ற நிகழ்வுகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வருகின்ற ஆகஸ்ட் 2ம் தேதி அன்று படம் திரைக்கு வருவதையொட்டி தற்போது இப்படத்திற்கு தணிக்கை குழுவில் 'யு' சான்று கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.