ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த், கார்த்திக், சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் அந்தகன். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில் தற்போதுதான் டிரைலர் வெளியிட்டுள்ளார்கள். இப்படத்தில் பிரசாந்த் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்திருக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் அடுத்தடுத்து சில கொலைகள் நடைபெறுகிறது. அந்த கொலைகளுக்கு யார் காரணம் என்பது போன்ற கேள்விகளுடன் கதை செல்கிறது. சமுத்திரகனி காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இந்த படத்தில் கார்த்திக் முத்துராமன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையமைத்துள்ள இந்த படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.